டியூஷன் சென்ற சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை பொலிசார் கைது செய்தனர். |
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூரை சேர்ந்த நிஷா(வயது 7,
பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து
வருகிறார். இங்கு பெரியாங்குப்பத்தை சேர்ந்த பீர் முகமது (வயது 58) அரபு, உருது மொழிகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். இவரிடம் நிஷா டியூசன் படிக்கிறார். நேற்று காலை டியூஷனுக்கு சென்ற போது நிஷாவை பீர் முகமது பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. இது குறித்து, மாணவி பெற்றோரிடம் தெரியப்படுத்தியதையடுத்து ஆம்பூர் மகளிர் பொலிசில் நிஷாவின் பெற்றோர் புகார் செய்தனர். பொலிசார் விசாரித்து, பீர் முகமதுவை கைது செய்தனர் |
0 கருத்துகள்:
Post a Comment