ஏமனில் அல்கொய்தா தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். அங்கு பயிற்சி முகாம்கள் அமைத்து சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகின்றனர். எனவே அமெரிக்க ராணுவம் அங்கு முகாமிட்டு அவர்களை அழித்து வருகிறது.
இது அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு கடும் எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அமெரிக்காவை மிரட்டும் வகையில் ஒரு அறிவிப்பை ஆடியோ மூலம் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
அல்கொய்தா இணையதளத்தில் வெளியான அறிவிப்பில் ஏமன் நாட்டில் தங்கியிருக்கும் அமெரிக்க தூதரை கொலை செய்பவருக்கு ரூ.1 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கம் வழங்கப்படும்.
மேலும் ஏமனில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க ராணுவ வீரரின் தலைக்கு தலா ரூ.15 லட்சம் பரிசளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிகாத்தை ஊக்குவிக்க இந்த பரிசு தொகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment