சுவிஸ் அரசு சிறப்புப்படை
ஒன்றை நிறுவி தங்கள் நாட்டில் வந்து தங்கியுள்ள போர்க் குற்றவாளிகளையும் மனித உரிமை
மீறலில் ஈடுபடுபவர்களில் பிடிக்க தீவிரமாக இறங்கியது.
ஜெனீவாவில் உள்ள Trial என்ற அமைப்பும் International என்ற மனித உரிமை அமைப்பும்
சுவிஸ் அதிகாரிகள் உடனடியாக இப்பணியில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. யூலை முதல் மத்திய கூட்டரசின் சட்டத்துறையுடன் புதிய சர்வதேச குற்றவியல் சட்ட அறிஞர் மையமும் இணைந்து செயல்படுகிறது. இந்த புதிய மையத்தில் இரண்டு மத்திய கூட்டரசுடன் போரிஸ் அதிகாரிகளும் மூன்று சட்ட வல்லுநர்களும் இடம் பெற்றுள்ளனர். டிரையலின் இயக்குனர் பிலில் கிராண்ட் சர்வதேச வேண்டுகோளை ஏற்று சுவிஸ் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 2001ம் ஆண்டில் ரோம் கொள்கை ஒப்பந்தம் ஒன்றில் சுவிஸ் அரசு கையெழுத்திட்டு சர்வதேச நீதிமன்றத்தை நிறுவியது. 2011 ஜனவரி 1 வரை சுவிஸ் தண்டனைச்சட்டப்படி போர் குற்றங்களில் தொடர்புடையதாக சந்தேகப்படும் ஒருவர் மீதோ மனித உரிமை மீறலில் தொடர்புடையவர் மீதோ உலகில் ஏதாவது ஒரு நாட்டில் இனப்பகை குற்றவாளிகளில் ஈடுபடும் ஒருவர் மீதோ சுவிஸ் அரசு விசாரணை நடத்தலாம். இவர் சுவிட்சர்லாந்துடன் தொடர்புடையவராக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. யாராக இருந்தாலும் சுவிஸ் அரசுக்கு விசாரிக்க உரிமையுண்டு. இப்போது அல்ஜீரியாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் காலேத் நேசாரையும் கவுதமாலா நாட்டின் முன்னாள் காவல் துறை தலைவர் எர்வினையும் சுவிஸ் அரசு கைது செய்து விசாரிக்கும். இவர்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது |
0 கருத்துகள்:
Post a Comment