Search This Blog n

11 December 2012

ஈரானின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

 
சூடான் நாட்டின் துறைமுகத்திற்கு ஈரான் நாட்டின் இரு ஏவுகணை மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் விரைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரான், அண்டை நாடுகளுடன் கடற்பயிற்சியை மேற்கொள்ளும் நடவடிக்கையே இது என்று தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்திய மற்றும் கடல் எல்லைகள் தொடர்பான அரசியல் மற்றும் தூதரக நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கடத்தும் நோக்கத்துடனேயே சூடானுக்கு கப்பல்கள் விரைந்துள்ளதாக குற்றம் சுமத்தி உள்ளது.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்னரும் ஈரானின் போர்க்கப்பல்கள் சூடானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

Post a Comment