Search This Blog n

20 December 2012

உலக அழகி 2012: இந்தியர்களை ஏமாற்றினார் ஷில்பா சிங்

உலக அழகி 2012ம் ஆண்டிற்கான போட்டியில் இந்தியாவின் ஷில்பா சிங் தோல்வி அடைந்தார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள பிளானட் ஹாலிவுட் கசினோவில் நேற்று மிஸ் யுனிவர்ஸ் அதாவது பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 89 அழகிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை தொலைக்காட்சி மூலம் 180 நாடுகளைச் சேர்ந்த 1 பில்லியன் பேர் கண்டு மகிழ்ந்தனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த ஷில்பா சிங் கலந்து கொண்டார்.
ஷில்பா பட்டம் வென்று வருவார் என்று இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்தநிலையில் அவர் முதல் 10 இடங்களில் கூட வரவில்லை.
இது இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.


0 கருத்துகள்:

Post a Comment