Search This Blog n

25 December 2012

பல்கலைச் சமூகம்

 


சிறீலங்காவின் யாழ் பிராந்தியத்திற்கான கட்டளை தளபதியுடன் கடந்த 21ஆம் திகதி யாழ் பல்கலைச் சமூகம் சந்திப்பொன்றை நடத்தியது யாவரும் அறிந்ததே,
இக் கலந்துரையாடலில் காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைகழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு யாழ். மாவட்ட கட்டளை தளபதி அரும்பாடுபடுகின்றார் என்பது இதனூடாக அறியலாம்.

அரும்பாடு பட்டாவது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என இவர் நினைப்பது பகல் கனவாக அமையும்.


யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் மாவீரர் தினத்தை கொண்டாட முனைந்தார்கள் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்படார்கள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது.


ஆனால் தற்போது இவர்கள் விடுதலைப் புலிகளின் பிரிகேடியர் தரங்களில் இருப்பவர்கள் என கூறும் யாழ். கட்டளை தளபதி, இதனை பல்கலை சமூகத்தினருடனான சந்திப்பில் தெரிவித்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அப்படியானால் ஏனைய மாணவர்களையும் கைது செய்து விட்டு அவர்களும் மேஜர், கப்டன் தரங்களில் இருப்பவர்கள் என்றும், இவர்களுக்கும் புனர்வாழ்வு கொடுக்க வேண்டும் என்றும் கூறுவதற்கு அவருக்கு நெடுநேரம் எடுக்காது.

மாணவர்கள் ஆரம்பத்தில் கைது செய்யப்படும் போது பல்கலை சூழலில் அமைந்துள்ள அரசியற் கட்சி அலுவலகம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பல்கலை வளாகத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்க முற்பட்டார்கள் அதனால் கைது செய்தோம் எனவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர் என்றும் கூறுகின்றனர்.

புனர்வாழ்வு பெறுவதற்காகவா மாணவர்கள் பல்கலைக்கழகம் வந்தார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? புனர்வாழ்வு என்றால் சிரட்டையில் அலங்கார பொருள் செய்து பழகுவதுதானே? அதற்கு ஒருபோதும் மாணவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் அதிகார பீடங்கள் என்ன கூறுகின்றதோ அதைத்தான் நாங்கள் கேட்க வேண்டும் இது தான் தமிழனின் தலைவிதி!

அது ஒரு புறமிருக்க கைது செய்யப்பட்ட மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் அவரின் ஆட்சி விரைவில் அமையும் எனவும் கூறுவதாக யாழ். கட்டளை தளபதி கூறுகின்றார்.

ஆனால் தங்களுடைய பிள்ளைகள் அவ்வாறு கூற மாட்டார்கள் என அவர்களுடைய பெற்றோர் கண்ணீர் மல்க கூறுகின்றனர். இதனை அவர் கேட்ப்பதாக தெரியவில்லை.

கேட்பவன் மடையனாக இருந்தால் எருமை மாடும் ஏதோ ஓட்டுவது போல அதிகாரத்தின் விளக்கங்கள் அமைகின்றன. தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் ஒன்றும் சிறுபிள்ளைகள் இல்லை. அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னரே கல்விச் செயற்ப்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என மாணவர்கள் காத்திருப்பது கனவிலும் நடக்காது. கைது செய்ய பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கும் கல்வி நடவடிக்கைக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை என தளபதி கூறியுள்ளார்.

பல்கலைக்கழகம் என்பது ஒன்றுமையின் சின்னம். அங்குதான் எத்தனையே மனித விழுமியங்களும் உணர்வுகள் கட்டியெழுப்பப்படுகிறன. கைது செயப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் தானே. நாம் எனது கல்வியைத் தொடருவேம் என ஒரு மாணவனும் நினைக்கமாட்டன். அவ்வாறு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது வெறும் சொற்பேச்சாய் முடிந்துவிடும்.

அத்துடன் பல்கலைக்கழக சூழலிருந்து இதுவரை பொலீஸ் காவலரன்களோ, புலனாய்வாளர்களின் நடவடிக்கைகளோ குறைந்ததாக தெரியவில்லை. பல்கலையின் ஒவ்வெரு வாசலினை சூழவும் பொலீசார் காவலரனை அமைந்து கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறான செயற்ப்பாடுகள் தென்னிலங்கையிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்திலும் நடக்காது ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தில் நடக்கின்றது இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பல்கலையின் கல்வி நடவடிக்கை என்பது சாத்தியமற்றது என பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பல்கலைக்கழகம் இயங்கவைப்பதற்கு யாழ் மாவட்ட இராணுவத் தளபதி எத்தனையேh முயற்சிகளை மேற்கொண்டாலும் பயனளிக்க போவதில்லை.

அத்துடன் இச்சந்திப்பில் மஹிந்த ஹத்துருசிங்க, முப்பது வருட கால அழிவுக்கு புலிகளும் அவர்களை உருவாக்கி வளர்த்துவிட்ட தமிழர்களும் பல்கலைக்கழக சமூகமுமே காரணம் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தாரம்.

இதற்கு அங்கு அமர்ந்திருந்த பேராசான் ஒருவர் சிறந்த பதிலை வழங்கியிருக்கின்றார் விடுதலைப் புலிகளை சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே வளர்த்து விட்டனர்.

தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவாகவே புலிகள் தோன்றினர். இன்று மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது என்றால் அந்த அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதே அதற்குக் காரணம் என கூறியுள்ளார்.

இது மிகவும் ஆணித்தரமான ஒரு கருத்தாகும் தமிழர்களுடைய உணர்வுகள் சிதைக்கப்பட்டு அடக்கப்பட்டு வந்தமையினாலே விடுதலைப் புலிகள் என்ற ஒரு அமைப்பு உருவாகியது ஆனால் துரதிஸ்ட வசமாக அவ் அமைப்பு அழிக்கப்பட்டு விட்டது யுத்தம் முடிவடைந்து முன்றரை ஆண்டுகளை கடக்கப் போகிறது.

ஆனால் போராட்டம் ஒன்று எதற்காக ஆரம்மிக்கப்பட்டதோ அந்த நோக்கங்கள், அபிலாசைகளுகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை,

எனவே தமிழ் மக்களிடைய அபிலாசைகள், அவர்களுடைய தேவைகள் ஜனநாயக ரீதியான உரிமைகள் என்பன மதிக்கப்பட்டு தீர்க்கப்படும் வரை இனப் பிரச்சனை என்பது இலங்கைத்தீவின் தொடர்கதையாகவே தொடரும்...

0 கருத்துகள்:

Post a Comment