கனடாவின் கியூபெக்
மாகாணத்தில், தனது தாயால் கொலை செய்யப்பட்ட மூன்று பச்சிளம் குழந்தைகளின் இறுதிச்
சடங்கு நடந்தது.
கியூபெக் மாகாணத்தில் உள்ள டமன்ட்வில் நகரில், தனது மூன்று பச்சிளம்
குழந்தைகளையும் தாயே நீரில் அமுக்கி கொலை செய்தார். இவ்வழக்கில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இறந்த பச்சிளம் குழந்தைகளின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஆராதனையை நடத்திய போதகர், நிச்சயமாக இந்த சடங்கின் மூலம் குழந்தைகளின் ஆன்மாவும், குடும்பத்தினரும் சாந்தி அடைவர் என்றார். இக்குழந்தைகளின் மரணம், இவர்களது தந்தைக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிகழ்வின் போது குழந்தைகளின் வயதை குறித்து 5, 4, 2 என்ற எண்கள் எழுதப்பட்டு பலூன்கள் பறக்கவிடப்பட்டன |
0 கருத்துகள்:
Post a Comment