மணி நேரம் டெல்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிய கடைசி 8 மணி நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது தெரிய வந்துள்ளது. மாணவியுடன் அவரது பெற்றோர் மற்றும் 2 தம்பிகள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். அவர்கள் மாணவி அருகிலேயே இருந்தனர்.
வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தான் அவருக்கு தலையில் காயம் இருப்பதை சிங்கப்பூர் டாக்டர்கள் கண்டு பிடித்தனர். இந்த நிலையில் மறு நாள் (வெள்ளிக்கிழமை) மாணவி உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கின. கிருமி தொற்றும் உடல் முழுக்க பரவி விட்டதால் டாக்டர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு மாணவி பெற்றோரை சந்தித்த டாக்டர்கள் வருத்தம் தெரிவித்தனர். அதன் பிறகு 8 மணி நேரம் மாணவி பெற்றோர் அனுபவித்த தவிப்பு கொடூரமானது. இதுபற்றி மாணவியின் 2 தம்பிகளில் ஒருவர் கூறியதாவது:-
வெள்ளிக்கிழமை இரவு எங்களிடம் வந்த டாக்டர்கள் நாடி துடிப்பை காட்டும் கருவியை என் சகோதரி உடம்பில் பொருத்தி இருப்பதாக கூறினார்கள். அந்த கருவி 0 என்று காட்டினால் மூச்சு நின்று விட்டதாக அர்த்தம். அருகில் இருந்து கொள்ளுங்கள் என்றனர். இதனால் நாங்கள் எல்லோரும் அந்த கருவியையே பார்த்து கொண்டிருந்தோம். அதில் நம்பர் குறைய, குறைய என் தாய் கதறி அழ தொடங்கினார். அதிகாலை 4.45 மணிக்கு அந்த கருவியில் 0 என்று வந்தது. எங்கள் கண் எதிரிலேயே அவர் மூச்சு நின்று போனது

0 கருத்துகள்:
Post a Comment