கருத்துக்கணிப்பில் தகவல்
கனடா நாட்டை சேர்ந்தவர்கள் 2013ஆம் ஆண்டின் பொருளாதாரம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக CIBC எடுத்துள்ள ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. CIBC எடுத்துள்ள இந்த ஆய்வில், 70 சதவிகித கனடிய மகக்ள் தங்களுடைய பொருளாதார நிலை பாதுகாப்பானதாக இருப்பதாக உணர்வதாக கருத்து கூறியுள்ளனர். இது சென்ற ஆண்டு எடுத்த சதவிகிதத்தை விட 6 சதவிகிதம் கூடுதலானதாகும்.
65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்களை சேர்ந்தவர்கள் கனடிய பொருளாதாரம் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக கருத்து கூறினர். அவர்களில் 73 சதவிகிதத்தினர் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் நல்லபடியாக இருந்தது. ஆனால், 25 முதல் 34 வயது வரை உள்ளவர்கள் கருத்துக்கள் சற்று பின் தங்கையிருந்தது. அதாவது பொருளாதாரம் திருப்தியாக இருந்ததாக 67 சதவிகிதத்தினர் மட்டுமே தெரிவித்தனர்.
இந்த கருத்துக்கணிப்பை எடுத்த CIBC எக்ஸிகியூட்டிவ் தலைவர் Christina Kramer செய்தியாளரிடம் கூறியதாவது: வரும் 2013 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைகுறித்து ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கனடியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் இலக்கை வரும் ஆண்டில் அடைந்துவிடுவதாக பெரும்பாலானோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சில இடங்களில் பொருளாதார நிலை குறித்து அச்சப்படும்படியான கருத்துக்கள் எழுந்தபோதும், ஒட்டுமொத்த கருத்துப்படி பார்த்தால், கனடாவின் பொருளாதாரம் குறித்து தற்போதைக்கு எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என்றுதான் ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது" என்று கூறினார்
0 கருத்துகள்:
Post a Comment