தலிபான்களால் கடத்தப்பட்ட
பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பெஷாவர் பகுதியின் சோதனை சாவடிகளில்
இருந்த 20க்கும் மேற்பட்ட துணை நிலை இராணுவத்தினரை தலிபான்கள் கடத்தி சென்றனர். இவர்களை மீட்பதற்கான முயற்சிகளை இராணுவத்தினர் எடுத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் 20 பேரின் உடல்களை பொலிசார் மீட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் அமெரிக்காவுடனான உறவை முறிக்காத பட்சத்தில் நாங்கள் ஆயுதங்களை கீழே போடப் போவதில்லை என தலிபான்கள் எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. |
0 கருத்துகள்:
Post a Comment