Search This Blog n

18 December 2012

வானில் இருந்த வீழ்ந்த மர்மபொருட்கள். மாயன் காலண்டரின் மர்மமா?

           
 

கனடிய ராணுவம் தீவிர சோதனைகனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரன்ஸ்விக் எல்லைப்பகுதியில் இந்த வாரம் வானிலிருந்து வீழ்ந்த இரண்டு உலோகப் பொருட்கள் என்ன என்பதைக் கண்டறிவதில் கனடிய இராணுவம் தீவரமாக உள்ளது{புகைபடங்கள்,}.


கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு உலோகப் பொருட்களும், ஒரே பொருளாக வீழ்ந்து விசையின் தாக்கத்தினால் இரண்டாக உடைந்தனவா என்பதும் ஆராயப்படுகிறது.



கியூபெக் மற்றும் நியூபிரன்வீக் மாகாண எல்லைப் பகுதியலுள்ள பெகன்மூக் பிரதேசத்திற்கு அண்மையில் காணப்பட்ட இந்த உலோகப் பொருட்கள் எவ்வாறு பூமியை வந்தடைந்தன என்பது பற்றியும் இது விமானமொன்றின் உதிரிப்பாகமா அல்லது செய்மதியையொத்த காலநிலைக் கண்காணிப்புக் கருவியா என்பது குறித்தே ஆராயப்படுகிறது.


கனடிய இராணுவமும் கனடிய மத்திய பொலிசாரும் இந்த பொருள் வீழ்ந்ததைக் கண்டுபிடித்த மக்களை இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். வானில் ஆயிரக்கணக்கான செய்மதிகளும், ஏராளமான இன்னபிற கருவிகளும் நிலைகொண்டுள்ளன.
அவை எப்போதும் விழலாம். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விழுவது, மாயன் காலண்டரில் கூறியபடி உலகம் அழிவதற்கான அறிகுறியா? என்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது

0 கருத்துகள்:

Post a Comment