கையில் கத்தியுடன் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்தியாவில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு மிளகு தூள் ஸ்ப்ரேயும் கத்தியையும் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். |
டெல்லியில் மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமான
நிலையில் உள்ளார். இன்று பீகாரில் 8 வயது சிறுமியொருவர் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தியா பெண்களுக்கு சுதந்திரமில்லாத நாடு என்பதை உணர்த்தும் வகையில் அண்மையில் இதுபோன்ற அதிகமான சம்பவங்கள் நடந்து வருகின்றது. இதனால் வெளியில் செல்லும் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு மிளகு ஸ்ப்ரேயும் கத்தியையும் எடுத்துச்செல்ல தொடங்கியுள்ளனர். இது குறித்து டெல்லியைச் சேர்ந்த பூர்ணிமா சர்மா(வயது 55) கூறுகையில், ஒரு முறை சில ஆண்கள் ஒரு பெண்ணிடம் தவறாக நடிக்க முயன்றதைப் பார்த்தேன். உடனே அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து பொலீஸ் ஒருவரிடம் தெரிவித்து அப்பெண்ணை காப்பாற்றுமாறு கேட்டேன். ஆனால் அவர் அப்பெண்ணை காப்பாற்ற மறுத்ததுடன் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் என்று என்னைத் திட்டினார். அவரது செயல் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது என்றார். சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பெண்களின் நிலைமையைப் பார்த்தீர்களா? வீட்டை விட்டு புறப்பட்டு வேலைக்கு போகவே பலமுறை யோசிக்கின்றனர். இது சுதந்திர நாடா என்று சந்தேகமாக உள்ளது என்றார் |
0 கருத்துகள்:
Post a Comment