Search This Blog n

28 December 2012

டெல்லி மாணவி சரணடைந்திருக்கலாம். பெண் விஞ்ஞானியின்

          
 
மருத்துவ படிப்பு மாணவி தன்னை 6 பேர் சூழ்ந்தவுடன் அவர்களிடம் சரணடைந்திருந்தால் இந்நேரம் அவரது குடல் தப்பித்திருக்கும் என்று விஞ்ஞானி டாக்டர் அனிதா சுக்லா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படு்ததியுள்ளது.மேலும் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் சுற்றினால் இது போன்ற சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல் துறை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் விஞ்ஞானி டாக்டர் அனிதா சுக்லா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஆண்களை கற்பழிப்பு போன்ற குற்றங்களைச் செய்ய பெண்கள் தான் தூண்டுகிறார்கள். டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவி இரவு 10 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே ஏன் இருக்க வேண்டும்.
இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் சுற்றினால் இது போன்றவை நடக்கத் தான் செய்யும். தன்னை 6 ஆண்கள் சூழ்ந்தவுடனே அந்த பெண் அவர்களிடம் சரணடைந்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்நேரம் அவரின் குடல் தப்பித்திருக்கும் என்றார்.
அவ்வாறு இப்படி பேசுகையில் போலீசார் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். அனிதா அரிமா சங்க செயலாளராகவும், விவசாய விஞ்ஞானியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

Post a Comment