Search This Blog n

29 December 2012

முட்டையால் ஏற்பட்ட விபரீதம்!?


நண்பர்கள் வைத்த பந்தயத்தில் போட்டி போட்டு, 28 முட்டைகள் சாப்பிட்ட வாலிபர் வயிற்று வலியால் துடித்து பலியானார்.
துனிசியா நாட்டின் எல்-பேட்டன் பகுதியை சேர்ந்தவர் தாவூ பட்னாசி(வயது 20).
இவர் தன் நண்பர்களிடம் வேக வைக்காத 30 முட்டைகளை ஒரே சமயத்தில், சாப்பிட்டு காண்பிப்பதாக பந்தயம் கட்டினார்.
இதற்கு நண்பர்கள் ஒப்பு கொண்டதால் புயல் வேகத்தில் முட்டைகளை உடைத்து வாயில் ஊற்றிக் கொண்டார்.
28 முட்டைகளை விழுங்கிய பட்னாசிக்கு அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே இவர் இறந்து விட்டார்

0 கருத்துகள்:

Post a Comment