|
|
சோதனை வெற்றிஇந்தியா தனது இராணுவத்திற்கு தேவையான
அக்னி மற்றும் பிருத்வி ரக ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. |
இந்நிலையில் இன்று அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று குறிப்பிட்ட இலக்கை
தாக்கக்கூடிய வல்லமை வாய்ந்த பிருத்வி-2 ஏவுகணை சோதனை காலை 9.21 மணிக்கு ஒடிசா
மாநில கடற்கரையில் சண்டிப்பூர் அருகே உள்ள பலாசூர் ஏவுகணை தளத்தில் இருந்து
ஏவப்பட்டது.
இது வெற்றிகரமாக பறந்து சென்றதுடன் சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது 500 கிலோ முதல் 1000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்தவாறு 350 கி.மீ.
தொலைவில் பறந்து சென்று இலக்கை தாக்கக் கூடியது.
இதற்கு முன்பு, பிருத்வி ஏவுகணை சோதனை கடந்த ஒக்ரோபர் மாதம் 4ம் திகதி இதே
இடத்தில் நடந்தது. 2 மாதத்தில் மீண்டும் சோதனை நடத்தி உள்ளது. |
|
0 கருத்துகள்:
Post a Comment