இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் நேற்றிரவு கரை திரும்பினர். |
சுமார் 10.30 மணி அளவில் மண்டபம் பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். எனினும் கடந்த 15ம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற சாந்த மூர்த்தி, அழகேசன், தர்மலிங்கம், பெரியசாமி ஆகிய 4 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்றும் அவர்களின் நிலை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த சனிக்கிழமை கச்சதீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களின் படகு சேதமடைந்தது. இதனால், அவர்கள் கச்சதீவில் கரை ஒதுங்கினர். அவர்களை மீட்க இராமேஸ்வரத்திலிருந்து 4 மீனவர்கள் நாட்டுப்படகில் சென்றனர். இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்கள் 8 பேரையும் சிறைப்பிடித்தனர். |
0 கருத்துகள்:
Post a Comment