இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்லி இந்திய மாணவன் மீது ஜெர்மனியில் கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இது குறித்து ஜெர்மன் போலீஸôர் தெரிவித்துள்ள விவரம்:
ஜெர்மனியின் பான் பகுதியில் 24 வயது மிக்க இந்திய மாணவன் ஒருவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். வழியில் அவரை மறித்த சிலர் மாணவருடைய மதத்தைப் பற்றி கேட்டிருக்கிறார்கள். அவரும் கூறியிருக்கிறார்.
ஆனால் அவர்கள் அந்த மாணவனை உடனடியாக இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர். மாற மாட்டேன் என்று சொன்னால் மாணவனுடைய நாக்கை அறுத்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
ஆனால் அதற்கு அந்த மாணவன் மறுக்கவே அவரைக் கொடூரமாகத் தாக்கி நாக்கையும் அறுத்துவிட்டு காரில் தப்பிச் சென்றுவிட்டனர். ரத்தக் காயங்களால் துடித்துக்கொண்டிருந்த மாணவனை அந்த வழியாகச் சென்ற ஒருவர் பார்த்து ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.
மருத்துவமனையில் மாணவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களில் அவர் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரைத் தாக்கியவர்கள் தீவிர மதவாதிகளாக இருக்கலாம்; அவர்களைப் பற்றிய அடையாளமோ, சரியான விவரமோ மாணவனுக்குத் தெரியவில்லை. நடந்த சம்பவத்தின் அடிப்படையில் அவர்களைத் தேடி வருகிறோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்

0 கருத்துகள்:
Post a Comment