Search This Blog n

10 December 2012

அனைவரையும் விடுவிக்க கோரி கிளிநொச்சியில் பாரிய ??


கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் விடுவிக்க கோரி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பு இன்று (10) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காலை 11 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமசந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பென்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம். கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு மாணவர்களை உடனே விடுவிக்க கோரி கோசங்களை எழுப்பினார்கள்.

மிகுதியுள்ள 4 மாணவர்களையும் அரசு உடனே விடுவிக்க வேண்டும். கடந்த காலங்களை போலவே வடக்கில் இன்றும் காரணங்கள் இன்றிய கைதுகள் தொடர்கின்றன. கடந்த சில தினங்களில் அவ்வாறு பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

உறவினர்களிடம் எதற்காக அவர்களை கைது செய்ததாக தெரிவிக்காமலேயே அவர்களை கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவ்வாறான கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற கொண்டிருந்தவேளையில் கிளிநொச்சி மக்கள் என கூறிகொண்ட சில இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு எதிர்புறமாக நின்று ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்{புகைபடங்கள், }





0 கருத்துகள்:

Post a Comment