மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ், அக்ஷய் தாக்குர், பவன் மற்றும் வினய் ஆகிய 6 பேர் மீது டெல்லி பொலிசார் கொலை வழக்கைப் பதிவு செய்தனர். |
இது குறித்து டெல்லி பொலிஸ் (சட்டம், ஒழுங்கு) ஆணையர் தர்மேந்திர
குமார், செய்தியாளர்களிடம் கூறியது: இவ்வழக்கில் வரும் ஜனவரி 3ம்
திகதிக்குள் குற்றப்பத்திரிகையைச் சமர்ப்பிப்போம். இவ்வழக்கில், கொலைக்குற்றத்துக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை விரைவு நீதிமன்றத்தில் தினசரி அடிப்படையில் நடத்துவதற்காக சிறப்பு அரசு சட்டத்தரனி நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர தீவிர முயற்சி மேற்கொள்வோம். இத்துயரச் சம்பவத்துக்காக மற்றவர்களைப் போலவே நாங்களும் வருத்தமடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். 6ஆவது குற்றவாளி சிறையில் அடைப்பு: மாணவி பாலியல் பலாத்காரச் சம்பவத்தில் தொடர்புடைய 6ஆவது நபரான அக்ஷய் தாக்குர் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி லோகேஷ் குமார் சர்மா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜனவரி 9ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அக்ஷய் தாக்குர் சிறையில் அடைக்கப்பட்டார். |
0 கருத்துகள்:
Post a Comment