Search This Blog n

14 August 2013

மக்கள் அதிர்ச்சியில் வீடு புகுந்து பெண்ணைக் கற்பழித்த பொலிசார்:


உத்தர பிரதேசத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணைக் கற்பழித்த பொலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க மக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் காகெரு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணின் வீட்டிற்குள் தீபக் ரதி மற்றும் விகாஸ் சவுத்ரி என்ற இரு பொலிசார் புகுந்துள்ளனர்.
அவர்கள் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமாவது கூறினால் உன்னை கொன்று விடுவோம் என்று அப்பெண்ணை மிரட்டியுமுள்ளனர்.
அவர்களின் மிரட்டலை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது அளித்த புகாரின் அடிப்படையில் அந்த 2 பொலிசாரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கிராமத்தினர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment