Search This Blog n

03 August 2013

உயர்ஸ்தானிகரை அழைத்து எதிர்ப்பை வெளியிட வேண்டும்



இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து எதிர்ப்பை வெளியிட வேண்டுமென தமிழகத்தின் முதல்வர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கம், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கடுமையான எதிர்ப்பை வெளியிட வேண்டுமென அவர் வலியுறத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் கைதுச் சம்பவங்கள் உயர்வடைந்துள்ளன. இலங்கைக் கடற்படையினர் சட்டவிரோதமான முறையில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மத்திய அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சியற்ற செயலினால் இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment