உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக, என் மீது குற்றம் சுமத்துவதா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு, நான் ஆதரவு தெரிவித்து, தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக, முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார். நான் எப்போது, எந்த தேதியில் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை கொடுத்திருக்கிறேன்? ஜெயலலிதா, தன் அறிக்கையில், "தேசிய உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை, மத்திய அரசு, லோக்சபாவில் அறிமுகப்படுத்திய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., தற்போது ஆதரிக்க போவதாகத் தெரிவித்துள்ளது' என, கூறியுள்ளார். "தி.மு.க., - எம்.பி., இளங்கோவன், இந்த மசோதாவை ஆதரித்து கூறியதாக, பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன' என்று, தன் அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். அதை பற்றி நான் விசாரித்த வரையில், இளங்கோவனின் பாதி பேட்டியை மட்டும் குறிப்பிட்டு, "தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை, தி.மு.க., ஆதரிக்கும்' என, இளங்கோவன் மூலமாக கருணாநிதி சொல்ல வைத்திருக்கிறார் என்று, ஜெயலலிதா அறிக்கையில் கூறியிருப்பது எவ்வளவு அநாகரிகமான செயல்! இந்தியாவில் சில்லரை வணிகத்தில், அன்னிய நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தது, என்.எல்.சி., பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று நான் கருத்து தெரிவித்திருப்பது என, இவை எல்லாம் மத்திய அரசை ஆதரிப்பதன் அடையாளமா? தமிழக டி.ஜி.பி.,யை பிரதமரின் பாதுகாவலர்கள் வரவேற்க விடாமல் தடுத்தது பற்றி கண்டனம் தெரிவித்திருக்கிறேனே, அது மத்திய அரசை ஆதரிப்பதன் அடையாளமா? இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment