Search This Blog n

11 August 2013

சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை -


நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது,

உள்நாட்டு சட்டங்களை அமுல்படுத்துவதில் நெகிழ்வுத்தன்மையை பின்பற்ற முடியாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சு, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரிடம் கோரியிருந்தது.

இராஜதந்திர ரீதியாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை அழைத்து ராஜதந்திர ரீதியான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், இந்திய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பில் விசேட சலுகைகள் காண்பிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. உள்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

Post a Comment