லண்டனில் உயிரிழந்த சென்னை மாணவியின் மரணமானது இயற்கை மரணம் என்று அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிக்க சென்ற சென்னை மாணவி ஜார்ஜினா கடந்த மாதம் 12ம் திகதி விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜார்ஜினாவின் உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சென்னையில் வசிக்கும் அவரது தந்தை தாம்சனிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் தாம்சன் தனது மகளின் மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் மேலும் பொலிசார் பிரேத பரிசோதனை அறிக்கையைத் தர மறுத்து விட்டனர் என்று லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் பிரேத பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள பொலிசார், மாணவி தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்படவும் இல்லை. இயற்கையாக மரணம் எய்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இதை நம்பாத தாம்சன் இயற்கை மரணம் நேர்ந்தது எப்படி என்று தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டதால் லண்டன் நீதிமன்றம் ஜார்ஜினாவின் உடலை மீண்டும் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment