விஜய் நடித்துள்ள தலைவா படமானது வெளியிடுவதில் பல சிக்கல்களை சந்தித்துள்ள நிலையில் சென்னை திரும்பிய முதல்வரை, நடிகர் விஜய் சந்திப்பாரா? என்று கேள்விகள் எழுந்துள்ளன.
நடிகர் விஜய் நடித்த "தலைவா" படம் திட்டமிட்டப்படி கடந்த 09.08.2013 அன்று வெளியாகவில்லை.
இந்நிலையில் கடந்த 8ம் திகதி படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு பெறவும், படத்தை வெளியிட உதவ நடவடிக்கை எடுக்குமாறு கேட்பதற்கு நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் விஜய் ஆகிய இருவரும் ஜெயலலிதாவை சந்திக்க கோடநாடு சென்றனர்.
ஆனால் அவரை சந்திக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையில் இப்படத்திற்கு 'கேளிக்கை வரி விலக்கு அளிக்க இயலாது' என்று கேளிக்கை வரி விலக்கு பரிந்துரை குழு அறிவித்துவிட்டது.
இந்நிலையில் "தலைவா" படத்தின் திருட்டு சிடிக்கள் வெளியாகி உள்ளதால் அதிர்ச்சி அடைந்த விஜய், இப்பட பிரச்சனையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு படம் வெளிவர உதவ வேண்டும்" என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஒன்றன் பின் ஒன்றாக சிக்கல்கள் தொடர்வதால், பிரச்சனைக்கு முடிவு ஏற்பட, தயாரிப்பாளர் மற்றும் விஜய் தரப்பினர் முயன்று வருவதோடு, கோடநாட்டில் இருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதாவை சந்திக்க ஏற்பாடு நடக்கிறதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment