இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை பகுதியில் பாகிஸ்தான்- இந்திய இராணுவத்திற்கு இடையே அடிக்கடி மோதல் நடப்பதால் இருநாடுகளுக்கான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்லைபகுதியில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக இருப்பவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ்.
எல்லைப் பகுதியில் நடக்கும் மோதல்கள் குறித்து பஞ்சாப் மாகாண சட்டசபையில் நடந்த விவாதத்தில், சட்ட அமைச்சர் ராணா சனாவுல்லா, இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தில், எல்லையில் இந்திய ராணுவம் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்வதால் அப்பாவி மக்கள் பலர் பலியாகின்றனர். இது கண்டனத்துக்கு உரியது.
இந்த விஷயத்தை சர்வதேச அளவில் நவாஸ் அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது
0 கருத்துகள்:
Post a Comment