Search This Blog n

09 August 2013

தலைவா படத்திற்கு வெடிகுண்டு தியேட்டரில் இல்லை கதையில் தானாம்!



விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள தடைகள் படக்குழுவினருக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.
முதலில் வெடிகுண்டு மிரட்டலால் ஆட்டம் கண்ட தலைவா பின்பு வெடுகுண்டு வைக்கிற அளவுக்கெல்லாம் படத்தில் ஒன்றுமில்லை என்று அறிக்கை வெளியிட்டது.
கோடி கோடியாய் கொட்டி கட்டிய திரையரங்கிற்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆளும் அரசாங்கத்திடம் சென்று பாதுகாப்பு வேண்டும் என கேளுங்கள் என்று விஜய்யிடமும், எஸ்.ஏ.சி-யிடமும் கூறிவிட்டு அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்குகளை நிறுத்திவைத்தன.
விஜய்யின் மாபெரும் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அரசாங்கம் திட்டமிட்டு நிறுத்திவிட்டதாக பேசப்பட்டு வந்த நிலையில் விஜய்யும், எஸ்.ஏ.சி.யும் அரசாங்கத்தின் உதவியை நாடுவார்களா? என்ற பரபரப்புடன் காத்திருந்தனர் திரையுலகினரும் ரசிகர்களும்.
இந்நிலையில் தான் தலைவா பிரச்சனையில் திருப்புனை ஏற்பட்டுள்ளது, நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
அதில் தலைவா படத்தின் கதை என் தாத்தா, அப்பாவின் வாழ்க்கையில் நடந்தது தான். மும்பையிலுள்ள தாராவியில் வசிக்கும் தமிழர்களுக்கு என் தாத்தா பல சேவைகளை செய்துவந்தார். அவரது மகன் எஸ்.கே.ராமசாமி என் தந்தை.
என் தாத்தாவிற்கு பிறகு என் தந்தை தான் அந்த ஏழை மக்களுக்கு தேவையானவற்றை செய்துவந்தார். என் தாத்தா மற்றும் என் தந்தையின் கதாபாத்திரங்கள் தான் ஒரு சில மாறுதல்களுடன்தலைவா திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி வரும் 14ம் திகதிக்குள் தலைவா திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வழக்கு, சட்டம் என ஒருபக்கம் தலைவா பிரச்சனை திசை திரும்பி இருக்க தலைவா பல தடைகளை தாண்டி வரவேண்டியது இருக்கும் என்கிறது கோடம்பாக்கம்

0 கருத்துகள்:

Post a Comment