தலைவா படமானது தடைகளை தாண்டி மிக விரைவில் வெளியாகும் என்று நடிகர் விஜய், ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
விஜய் , அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தலைவா. இப்படமானது தற்போது சந்தித்துள்ள சில பிரச்சனைகளால் வெளியிடாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விஜய் கூறுகையில்,நான் நடித்த 'தலைவா' திரைப்படம் இந்த வாரம் 9.8.2013 அன்று திரைக்கு வருவதற்காக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் குறிப்பிட்ட திகதியில் படம் வெளியாகவில்லை.
என் மீது பாசமும், அன்பும் கொண்ட ரசிகர்கள், ரசிகைகள், தாய்மார்கள் உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஏமாற்றத்தினால் சில ரசிகர்கள் விரும்பத்தகாத சில காரியங்களில் ஈடுபடுவதாக நான் அறிகிறேன்.
இது நமக்கு நல்லதல்ல. மிக விரைவில் தலைவா திரைப்படம் வெளியாகும் என்றும் அதுவரை பொறுமையோடும், கண்ணியத்தோடும் அமைதியாக இருக்க வேண்டுமென்று என் நெஞ்சில் குடியிருக்கும் அத்தனை பேரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment