Search This Blog n

11 August 2013

சீமானின் திருமண அழைப்பிதழ்! (வீடியோ இணைப்பு)


நாம் தமிழர் கட்சித் தலைவரும், இயக்குனருமான சீமானுக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் 8ம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.
மறைந்த முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியை சீமானுக்கு திருமணம் செய்ய பேசி நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி. ஏ. மெமோரியல் அரங்கில் நடைபெற உள்ள இந்த திருமணத்தை தமிழர் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமை வகித்து நடத்துகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார்.

மேலும் பல தமிழ் தேசிய அமைப்புகள், வெளிநாடு வாழ் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும், தமிழ் திரையுலக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் இத்திருமணத்தில் பங்கேற்க உள்ளனர்.


 


0 கருத்துகள்:

Post a Comment