உச்சிப்புளியில் சில பயணிகளை இறக்கிவிட்டு மண்டபம் நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது. அரியமான் விலக்கு அருகே நேற்று இரவு வந்தபோது முன்னாள் சிமிண்ட் மூட்டைகளை ஏற்றிய ஒரு லாரி பழுதாகி நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் வேன் பயங்கரமாக நின்ற லாரி மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதனால் மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதில் வேனில் பயணம் செய்த மண்டபம் காந்திநகரை சேர்ந்த ராணி (வயது35) சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாம்பனை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அமல்ராஜ் (28) ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மண்டபம் சவரத்தொழிலாளி புகழேந்தி (41), மண்டபம் காந்தி நகரை சேர்ந்த 3மாத குழந்தை யுவிராஜ் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.
வேன் டிரைவர் தங்கச்சி மடம் அருண் (21), மண்டபம் சிந்து (18), சேவியர் (29), சுந்தரமுடையான் புல்லாணி (43), அழகுசுந்தரி(35), புதுமடம் சசிகலா (27), அக்காள்மடம் ரூபன் (22), பாம்பன் லட்சுமணன் (35) ஆகிய 9 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் மண்டபம் சிந்து (18), பாம்பன் லட்சுமணன் ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு வரப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அன்வர்ராஜா எம்.பி., ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரடியாக வந்து பணியில் இருந்த டாக்டர் கண்ணனை சந்தித்து விபத்துக்குள்ளானவர்களின் நிலை குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அங்கு கதறி அழுது கொண்டிருந்த இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
0 கருத்துகள்:
Post a Comment