இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவருடன் அண்மையில் காங்கிரஸில் இணைந்த குஷ்பு, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது பேசிய இளங்கோவன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதியைக் குறைத்தது, தமிழக அரசு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது ஆகியவற்றிற்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை வாசன் புதுகட்சி குறித்து நடத்திய பொதுக்கூட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். இந்நிலையில், செய்தியாளர் ஒருவர், குஷ்புவிடம், காங்கிரஸில் சேர்ந்தது குறித்து கருத்துக்களை கேட்டுள்ளனர்.
தான் காங்கிரசில் சேர்ந்தது குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட குஷ்பு, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறினார். வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் துவங்கி பல திட்டங்களை ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ் செய்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி உண்மையில் தீவிரவாதத்திற்கு மட்டுமே எதிரான கட்சி என்று குஷ்பு தெரிவித்தார். இதனை அடுத்து செய்தியாளர் ஒருவர், அப்படியானால் எல்டிடிஇ இயக்கம் பயங்கரவாத இயக்கமா எனக் கேட்டுள்ளார். அதற்குப் குஷ்பு, “நிச்சயமாக. அப்பாவிகளின் உயிரை எடுப்பவர்கள் பயங்கரவாதிகளே” என்று பதிலளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment