ராஜஸ்தானின் கோட்டா நகரில் சொத்து விவகாரம் தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் மனைவியின் மூக்கை அவரது கணவர் கோடாரியால் வெட்டியுள்ளார். நந்து சிங் (வயது 40) என்பவரது மனைவி ஷிம்லா கன்வா.
இந்த தம்பதியர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனினும் சொத்து விவகாரம் ஒன்றை தீர்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் ஷிம்லா கன்வா தனது கணவரை சந்திப்பதற்காக
சென்றுள்ளார். அங்கு தனது சகோதரருடன் சேர்ந்து கொண்டு நந்து சிங் கோடாரியால் அவரது மூக்கை அறுத்துள்ளார். அவரது கையின் நான்கு விரல்களும் இத்தாக்குதலில் வெட்டப்பட்டுள்ளன. காயமடைந்த கன்வாவை அறை ஒன்றில் வைத்து இருவரும் பூட்டியுள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டு மஹாராவ் பீம் சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நந்து சிங் மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:
Post a Comment