பிரபல நடிகை வீணா மாலிக், அவரின் கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு, பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபாரதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டு நடிகை வீணா மாலிக் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பத்திரிக்கை ஒன்றில் நிர்வாண போஸ் கொடுத்த விவகாரத்தில் பெரிய
சர்ச்சையில் சிக்கியவர். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கும், பஷீருக்கும் திருமணம் நடந்தது. அப்போது ஒரு பாடலுக்கு நடன நிகழ்ச்சி நடந்தது. அந்த நடன காட்சிகள் மதத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகவும், மதத்தைக் கேலி செய்வது போன்றும் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது
பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சி பாகிஸ்தானின் பிரபலமான ஜியோ டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அது மதவாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து
தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் மத அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில் நடிகை வீணாமாலிக், அவரின் கணவர் பஷீர், ஜியோ டி.வி.யின் உரிமையாளர் மிர்ஷகில் உர் ரஹ்மான் மற்றும் டி.வி. நிகழ்ச்சித்
தொகுப்பாளர் ஷகிஸ்த பிவாகித் ஆகிய 4 பேர் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், மத அவமதிப்பு செய்ததாக நடிகை வீணா மாலிக், அவரின் கணவர் பஷீர், ஜியோ டி.வி. உரிமையாளர் மிர் ஷகில் உர் ரஹ்மான், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷசிஸ்தா வாசித் ஆகியோருக்கு தலா 26 ஆண்டு சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டது. மேலும் தலா ரூ. 13 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் இவர்களுக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர். எனவே இவர்கள் அனைவரும் வெளிநாட்டுக்கு தப்பினர். ஜியோ டி.வி. உரிமையாளர் ரஹ்மான் இங்கிலாந்திலும் மற்ற 3 பேரும் பிற நாடுகளிலும் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:
Post a Comment