5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பதாக மலையக தமிழ் எம்பியும், அமைச்சருமான செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
பின்னர் 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர்நீதிமன்றம் 5 மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தது.
இதனால், தமிழகம் முழுவதும் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பின்னர் இலங்கை நீதிமன்றத்தில் அங்குள்ள இந்திய தூதரகத்தால் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே தமக்குள்ள அதிகாரத்தின்படி 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருப்பதாக அந்நாட்டு அமைச்சர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த தொலைபேசி பேட்டியில், 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உரிய உத்தரவை நீதித்துறைக்கு ராஜபக்சே பிறப்பித்துள்ளார்.
இருப்பினும் இந்தியத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றால்தான் இது நடைமுறைக்கு வரும் என்றும், இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:
Post a Comment