அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரில் 4.50 லட்சம் பேர் இந்தியர்கள் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருபவர்களில், 4 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு இடைவெளியில் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக இடம் பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அதேசமயம், 2012ம் ஆண்டின்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக இடம் பெயர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை 1.12 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது அதே அளவில் உள்ளது. இன்டியானாவில் உள்ள சட்டவிரோத இந்தியர்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக உள்ளது. இரண்டாவது சட்டவிரோத குடியேறிகளாக இந்தியர்கள் உள்ளதாகவும் அந்த ஆய்வு
கூறுகிறது. மெச்ஸிகனில் 14%, மின்னசோட்டாவில் 9%, நியூ ஜெர்சியில் 11%, ஓஹையோவில் 11%, பென்சில்வேனியாவில் 11%, வாஷிங்டனில் 5%ஆக இந்தியர்களின் எண்ணிக்கை உள்ளது. அலாஸ்கா 4%, அரிஸோனா 2%, டெலவரே 7%, இல்லினாய்ஸ் 5%, கான்சாஸ் 5%, மாசசூசட்ஸ் 10%, மிசவுரி 9%, ஓரிகான் 2 சதவீதமாக உள்ளது. இங்கு 3வது பெரிய சட்டவிரோத குடியேறிகளாக இந்தியர்கள் உள்ளனர். ஆசியா, கரீபிய தீவுகள், மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகளிலிருந்து வருவோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. டாப் 10 வரிசையில் 3 லட்சம் பேருடன் சீனா முதலிடத்தையும், 2 லட்சம் பேருடன் பிலிப்பைன்ஸ் 2வது இடத்தையும், 1.80 லட்சம் பேருடன் தென் கொரியா, 1.70 லட்சம் பேருடன் டொமினிக்கன் குடியரசு, 1.50 லட்சம் பேருடன் கொலம்பியா ஆகிய நாடுகள் மூன்றாவது, நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment