இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு அழைக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி எஸ் எம் ஆனந்த முருகன் தாக்கல் செய்த இந்த மனுவில் இரண்டு நாடுகளும் செய்து கொண்டுள்ள கைதி பரிமாற்ற உடன்படிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த ஐந்து மீனவர்களும் இந்தியாவின் கரையில் இருந்து 12 கிலோ மீற்றருக்குள் வைத்தே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment