விஜய் நடித்த தலைவா திரைப்படம் நிச்சயம் இன்று வெளியாகும் என்று நம்பிக்கையோடு தியேட்டர் முன்பு திரண்ட ரசிகர்களை தடியடி நடத்தி பொலிசார் கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கிட்சிப்பாளையம் பகுதியில் உள்ள பிக் சினிமா தியேட்டரில் விஜய் நடித்த தலைவா படம் இன்றைக்கு வெளியாக இருந்தது. படத்தின் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி காலை 7.15 மணிக்கு என்பதால் அதிகாலை 5 மணியில் இருந்து ரசிகர்கள் வரத்தொடங்கினர்.
ஆனால் ஏழரை மணியளவில் 'படம் திரையிடப்படவில்லை காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது பணம் திருப்பி தரப்படும்' என்ற அறிவிப்பு பலகையை திரையரங்கம் முன்பு மாட்டினர்.
இதனால் கொந்தளித்த கூச்சலிட்ட ரசிகர்களை அங்கே வந்த கிட்சிப்பாளையம் காவல்நிலைய பொலிசார் அவர்களை களைந்து போகும்படி கூறினார். ஆனால் ரசிகர்கள் செவி சாய்க்காததால் கையில் தடிஅடி கொண்டு கூட்டத்தை களைத்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment