தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இளவரசன் என்னிடம் போனில் பேசினார் என திவ்யா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன், தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் தனிப்படை பொலிஸார், இளவரசன் மரணம் தொடர்பான ஆவணங்களைத் திரட்டியுள்ளனர்.
தற்போது திவ்யா சில புதிய தகவல்களை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதாவது, இளவரசன் தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நீ என்னோடு வாழ வராவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்தார்.
மேலும் உயர்நீதிமன்ற விசாரணையின்போது சென்னையில் லாட்ஜில் தங்கியிருந்த போது தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறினார் என்றார்.
மேலும் திவ்யா, இளவரசன் செல்போன் பேச்சுக்களை பொலிஸார் செல்போன் நிறுவனத்தின் மூலம் பதிவு செய்துள்ளனர். அதை திவ்யாவடிம் போட்டுக் காட்டி இதில் பேசியிருப்பது நீங்களும், இளவரசனுமா என்று கேட்டுள்ளனர்.
அதற்கு, இது நாங்கள் பேசியதுதான் என்று கூறியுள்ளார் திவ்யா. இளவரசன் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்ததையும் பொலிசார் கைப்பற்றி வைத்து இருக்கிறார்கள்.
ஏற்கனவே இளவரசன் எழுதிய காதல் கடிதங்களை வைத்து இந்த கடிதத்தில் இருப்பது இளவரசனின் கையெழுத்துதானா? என்று திவ்யாவிடம் கேட்டனர். அதை பார்த்த திவ்யா, இது இளவரசனின் கையெழுத்துதான் என்று உறுதிப்படுத்தினார்.
திவ்யாவின் தாய் தேன்மொழியும், இளவரசன் தற்கொலை செய்வதற்கு முன்பு தன்னிடம் போனில் தொடர்பு கெண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறியதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment