தர்மபுரியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளவரசன் திவ்யா பிரச்சனை தமிழ்நாடு முழுவதும் தீயாக பரவியது. இதில் இறுதியில் ஓன்று சேர முடியாது என தீர்மானித்த இளவரசன் இரயில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்நிலையில் இளவரசனின் தந்தை இளங்கோ இன்று சென்னையில் டி.ஜி.பி.யை சந்திக்க சென்றார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், பா.ம.க.வினர் தொடர்ந்து மிரட்டுவதாகவும் இதுகுறித்து டி.ஜி.பி.யை இன்று பிற்பகல் சந்தித்து மனு கொடுக்க இருப்பதாகவும் கூறினார்.
அவருக்கு வந்துள்ள மிரட்டல் கடிதத்தில் கூறியிருப்பதாவது, நீங்கள் அடங்கித்தான் நடக்க வேண்டும், நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு நீதிபதியை கேட்கிறீர்கள், வக்கீலை கேட்கிறீர்கள், உங்களுக்கு வேண்டிய விசாரணை அதிகாரியை போடவேண்டும் என்று கேட்கிறீர்கள், டாக்டர்களை கேட்கிறீர்கள், இனியும் இது தொடரக்கூடாது. அப்படி தொடர்ந்தால் உங்கள் மகன் கல்லறைக்கு அருகே நீங்களும் போக வேண்டியது வரும் என அக்கடிதத்தில் எழுதியிருந்தது
0 கருத்துகள்:
Post a Comment