தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா யூன் 28ம் திகதி முதல் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட காரில் சென்ற இவர், அடர்ந்த வனப்பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானைகள், மான் கூட்டங்களை பார்த்து ரசித்துள்ளார்.
பின்னர் தெப்பக் காட்டில் உள்ள யானை முகாமிற்கு வந்த முதல்வருக்கு 22 யானைகள் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மூர்த்தி என்ற மக்னா யானைக்கும் முதுமலை என்ற யானைக்கும் காவேரி என்ற 2 வயது குட்டி யானைக்கும் உணவு, பழம் இவற்றை முதல்வர் ஜெயலலிதா ஊட்டியுள்ளார்.
அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து மிரண்ட காவேரி என்ற குட்டியானை முதல்வரை தும்பிக்கையால் இடித்துள்ளது.
இதனால் தடுமாற்றமடைந்த முதல்வரை அவரை சுற்றியிருந்த காவலர்கள் தாங்கிப் பிடித்துள்ளனர். இதனால் சற்று பதற்றம் ஏற்பட்டவே அங்கிருந்து உடனே புறப்பட்டார் ஜெயலலிதா.
0 கருத்துகள்:
Post a Comment