Search This Blog n

24 July 2013

நடிகர் சஞ்சய்தத்தின் மனு நிராகரிப்பு: 42 மாதம்!!


மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய்தத்தின் சிறை தண்டனையை குறைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து சஞ்சய்தத் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்ததை தொடர்ந்து அவரது தண்டனைக் காலம் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சஞ்சய்தத் மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 5 ஆண்டு சிறைத் தண்டனையை குறைக்கக்கோரியும், மனுவினை மறுபரிசீலனை செய்யுமாறும் தற்போது உச்சநீதிமன்றத்தில் சஞ்சய்தத் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் அவரது மனுவினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுவினை தள்ளுபடி செய்ததுடன், 5 ஆண்டு சிறை தண்டனையில் மீதி உள்ள 42 மாதகாலத்தை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்
 

0 கருத்துகள்:

Post a Comment