தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பணமழையில் நனைந்துள்ளார்.
தேனியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான மாவட்ட நிதியளிப்பு கூட்டத்தில் கலந்துக் கொள்ள மு.க.ஸ்டாலின் மதுரையிலிருந்து கார் மூலம் தேனிக்கு வந்தார்.
அப்போது அவர் வரும் வழியில் மாவட்ட செயலாளர் மூக்கையா தலைமையில் தேனி மாவட்ட எல்லையான தெக்கானூரணியிலிருந்து தேனி நகருக்குள் வரும் வரை அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் தேனி புதூர் பிரிவு அருகே மு.க.ஸ்டாலின் வரும்போது தேவதானப்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஸ்டாலின் ரகு என்பவர் தான் வைத்திருந்த 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளை கார் மீது தூவி வரவேற்றுள்ளார். அப்போது உடனிருந்த திமுகவினர் உரத்த குரல் எழுப்பி உற்சாகமாக கைத்தட்டியதுடன் அந்த ரூபாய் நோட்டுக்களை சேகரித்தனர்.
இதனைத் தொடர்ந்து தொண்டர்களை சைகையால் அமைதிப்படுத்திய ஸ்டாலின் பின்பு பிரபல ஒட்டல் ஒன்றில் நடந்த மாவட்ட இளைஞரணியின் ஆய்வுக் கூட்டம் மற்றும் மாவட்ட நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்றார்
0 கருத்துகள்:
Post a Comment