கச்சதீவை மீளப் பெறுவது தொடர்பில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சிக்கலே காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை அரசியலில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமான ஒன்றென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் கற்கைகள் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க குறிப்பிட்டார்.
இந்தியாவுடன் சிறந்த உறவுகளைப் பேணும் பட்சத்தில் மாத்திரமே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.
கச்சதீவை இந்தியா மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தாக்கல் செய்த மனு தொடர்பில் விடயங்களை ஆராயுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் மத்திய அரசாங்கத்திற்கு நேற்று அறிவித்தல் விடுத்தது.
1974ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவை, இந்தியா மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆராய்வதே உயர் நீதிமன்றத்தின் நோக்கமாக அமைந்துள்ளது
0 கருத்துகள்:
Post a Comment