Search This Blog n

15 July 2013

இளவரசன் உடல் இன்று மாலை அடக்கம்


தருமபுரி இளவரசனின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.
இளவரசன் மர்மமான முறையில் தருமபுரி அரசு கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரை யாரோ கொலை செய்து விட்டதாகவும், முதலாவது பிரேத பரிசோதனையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவரது பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மறு பிரேத பரிசோதனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று பரிசோதனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து இளவரசனின் உடல் அரசின் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊரான நத்தம் காலனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு வீட்டு முன்பு சிறிய பந்தல் அமைக்கப்பட்டு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
உறவினர்கள், நண்பர்கள், நத்தம் காலனி மக்கள், இளவரசனுடன் படித்த பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் இளவரசனின் உடல் அடக்கம் நடக்கிறது.
இதற்காக நாயக்கன் கொட்டாயில் இருந்து நத்தம் காலனிக்கு வரும் வழியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பின்புறம் 30 சென்ட் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில்தான் இளவரசன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இளவரசன் உடல் அடக்கம் நடைபெறுவதையொட்டி நத்தம் காலனியில் தருமபுரி எஸ்.பி அஸ்ரா கார்க், கிருஷ்ணகிரி எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் தலைமையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அந்த காலனிக்கு வர வழி உள்ள இரண்டு பாதையிலும் பொலிசார் செக்போஸ்ட் அமைத்து உள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
இளவரசன் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், நண்பர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

Post a Comment