சிதம்பரத்தில் உள்ள இளநங்கூர் கிராமத்திற்குள் முதலை ஒன்று புகுந்து ஆடு ஒன்றை விழுங்கி ஏப்பம் விட்டு பிறகு சென்றது.
ஆனால் 15 அடி முதலையை ஊர்மக்கள் பிடித்துக் கட்டிவைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குளத்திலிருந்து வந்த இந்த முதலை இளநாங்கூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் வீட்டருகே வந்து ஆட்டுக்குட்டியை விழுங்கியுள்ளது.
முதலையை பார்த்து மிரண்ட நாய் பயங்கரமாக குரைத்தது. அப்போது விவசாயியும் அவரது மனைவியும் வெளியே வந்து பார்த்தால் முதலை ஆட்டை விழுங்கிவிட்டு வயலுக்குள் சென்று கொண்டிருந்தது.
பிறகு போராடி முதலையை பிடித்து கட்டிப்போட்டனர். அந்த முதலை 250 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment