உத்திரபிரதேச மாநிலத்தில் தவறு செய்த மாணவர்களை தண்டிக்கும் விதமாக தனியறையில் மாணவர்களை பூட்டி தண்டனை கொடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள கோஜ்வா பகுதியில் சரை சுர்ஜன் பிரிவில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களான ஆயுஷ் மற்றும் ரதி ஆகியோர் மிகுந்த பசியின் காரணமாக மதிய உணவை வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாப்பிட்டுள்ளனர்.
இதனைக் கண்டறிந்த ஆசிரியர் மாணவர்களைத் தண்டிக்கும் விதமாக அவர்களை ஒரு தனியறையில் வைத்துப் பூட்டியுள்ளார். பின்பு ஞாபக மறதியில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்று விட்டார்.
இந்நிலையில் அடைத்து வைக்கப் பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் திறந்து விடாததால் மாணவர்கள் இருவரும் பயத்தில் அழத் தொடங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பூட்டிய அறைக்குள் குழந்தைகளின் அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சிறுவர்களை காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் கோபமடைந்த பொதுமக்கள் ஆவேசமாக அப்பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களை தாக்க முயன்றுள்ளனர். பின்பு காவல் துறையினர் ஈடுபட்டு பெற்றோர்களை சமாதானப்படுத்தி பிரச்சனையை தீர்த்துவைத்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment