Search This Blog n

15 July 2013

சிறுமியை காரை ஏற்றிக் கொன்ற நடிகர்


மதுரை மாவட்டத்தில் நடிகர் பாலசரவணன் என்பவர் 4 வயது சிறுமியை காரை ஏற்றிக் கொன்றது தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளபட்டி பகுதியில் கடந்த 2 மாதங்களாக பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.
இந்த படத்தில் பரவையைச் சேர்ந்த பாலசரவணன் (வயது 26) என்பவர் நடித்து வருகிறார். இவர் குட்டிப்புலி என்ற படத்தில் பாலா என்ற பெயரில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.
இந்த பகுதியில் நடந்த புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பை முடித்தவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். காரில் அழகர் கோவிலில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் வல்லாளபட்டியில் வந்து கொண்டிருந்தார்.
அவர் காரின் எதிரே பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வயலில் வேலை செய்து விட்டு தங்களது 4 வயது மகள் உமாமகேஸ்வரியுடன் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று சாலையின் குறுக்கே சிறுமி ஓடியதாக கூறப்படுகின்றது. இதில் நடிகர் பாலசரவணன் ஓட்டி வந்த கார் அவள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த உமாமகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் அதே காரில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு உமாமகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தாள். உடலை பார்த்து நடிகர் பாலசரவணன் மற்றும் சிறுமியின் தந்தை முருகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து மேலவளவு பொலிசார் வழக்கு பதிவு செய்து நடிகர் பாலசரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
 

0 கருத்துகள்:

Post a Comment