Search This Blog n

21 July 2013

குடிநீர் தேவைக்காக ஆழியார் அணை நாளை திறப்பு:

 
முதல்அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியார் அணையின் பழைய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு முதல் போக பாசனத்திற்காகவும் மற்றும் பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்காகவும் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று ஆழியார் பழைய வாய்க்காலின் முதல்போக பாசனத்திற்கும், பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்கும் 22.7.2013 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும், பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment