தருமபுரி காதல் ஜோடி மறைந்த இளவரசனின் சட்டைப்பையில் இருந்து 2 கடிதங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இவரது உடல் நேற்று தருமபுரி அரசு கல்லூரிக்கு பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
அவரது சட்டைப்பையில் 2 கடிதங்கள் இருந்தது. அவற்றில் ஒன்று இளவரசன் தனது காதல் மனைவி திவ்யாவை பற்றி எழுதியது. மற்றொன்று திவ்யா இளவரசனுக்கு எழுதிய காதல் கடிதம்.
அதில் இளவரசன் எழுதியிருப்பதாவது, கடந்த 2010ம் ஆண்டில் திவ்யாவை நான் சந்தித்தேன். அப்போது அவர் ஐ லவ் யூ கூறினார்.
ஐனவரி 1ம் திகதி நானும், திவ்யாவும் வெளியில் சென்றோம். இந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாது.
பிறகு சினிமாவிற்கு சென்றோம், அப்போது முதன் முதலில் திவ்யாவை முத்தமிட்டேன்.
நாங்கள் வெளியில் சென்று வருவது, திவ்யாவின் அண்ணனுக்கு தெரிந்த பின்னர் எங்களை சத்தமிட்டார்.
இதனால் நாங்கள் எங்கும் சேர்ந்து செல்லாமல் இருந்தோம். இதன் பின் செல்போனில் அடிக்கடி பேசினோம். சில நாட்களிலேயே கோவிலுக்கு சென்று தாலி கட்டி கொண்டோம்.
இதன் பின்னர் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று அவரது வீட்டில் மதியம் 1 மணி முதல் மாலை வரை ஒன்றாக இருந்தோம்.
பின்னர் வீட்டிற்கு திரும்பிவிட்டோம். எங்கள் காதல் ஊராருக்கு தெரிந்து எதிர்ப்பு அதிகமானது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தில் உள்ளது இளவரசனின் கையெழுத்து தானா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இளவரசனுக்கு திவ்யா ஆங்கிலத்தில் எழுதிய காதல் கடிதம் இளவரசனின் சட்டைப்பையில் இருந்தது.
கடந்த 2011ம் ஆண்டு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் திவ்யா தான் இளவரசனுடன் பழகியது பற்றியும், அவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தில் உள்ளது திவ்யாவின் கையெழுத்து தானா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது
0 கருத்துகள்:
Post a Comment