Search This Blog n

23 July 2013

கட்டிலில் இருந்து விழுந்து படுகாயமடைந்த நடிகை மஞ்சுளா!!!


சென்னை: நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா (59) கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
நடிகர் விஜயக்குமாரின் 2வது மனைவி நடிகை மஞ்சுளா. இவர், விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று படுக்கை அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தார். அப்போது திடீரென கீழே விழுந்து விட்டார்.
இதில் அவருடைய வயிற்றில் கட்டிலின் கால் பலமாக குத்தி விட்டது. இதில் படுகாயமடைந்து துடித்தார் மஞ்சுளா. உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு போய் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மஞ்சுளா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் சோகமும், கவலையும் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து நடிகைகள் குஷ்புவும், ராதிகா சரத்குமாரும் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கையில்,
குஷ்பு: மஞ்சுளா ஆன்ட்டியின் ஆத்மா சாந்தி அடையட்டும். என்னைப் பொருத்த வரை நீங்கள் தான் அழகான பெண். லவ் யூ சோ மச்.
ராதிகா: மஞ்சுளா விஜயகுமார் அக்காவின் ஆத்மா சாந்தி அடையட்டும். இன்று உங்களைப் பார்த்த பிறகு நாம் ஒன்றாக இருந்த நேரங்கள் மற்றும் உங்களின் அன்பு நினைவுக்கு வருகிறது என்று உருக்கமாக கூறியுள்ளார்.
நவற்கிரி இணையங்கள்,, மறைந்த விஜயகுமார் மஞ்சுளாவின் ஆத்மா சாந்தி அடையவேண்டுகின்றோம்

0 கருத்துகள்:

Post a Comment